Coventry Tamil Welfare Association

கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கம்
Coventry Tamil Welfare Association

Hon Lady Godiva

Coventry, situated in the Midlands, is one of the ancient cities in England. World famous playwright William Shakespeare was born in Stratford, which is approximately thirty miles Southwest of Coventry. It is an industrial city and home for several inventions and productions. The very popular Jaguar car company is based here. Frank Whittle, who invented the Jet Engine, was born here too.

This city is world famous for our Lady Godiva's life story, which happened back in the thirteenth century and bringing meaning to the history and great heritage of the City, we still celebrate it every year in the streets of Coventry. The Godiva sprit, a timeless message of caring, unity and empowerment, stimulation and a smile for those in need of friendship - symbolises the humanity of mankind.

BHARATHANATYAM AND THE WORLDWIDE WEB

It was a magical world that I stepped into. One that was filled with musicality, serenity and divinity. As I threaded down the path of my Arangetram, little did I realise that at the end of it, the world of dance would have become part of me.
Since I could remember, I had always imagined myself performing my Arangetram whenever I attended one. Finally, with God�s grace I had the privilege to do so with Apsara teacher. She is one who personifies love and dedication to dance. When I try to make a list of things that I learnt from her, that list becomes endless. All I can tell you is that today I not only look at dance, but music, art, and culture with new eyes. It was she who opened that door into this magical world.-> -> -> M O R E

சங்கத்தின் நோக்கமும் செயல்பாடுகளும்

கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கமானது தமிழ்மக்களுக்கு உதவும் நோக்கோடு 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளையாக இங்கிலாந்திலும், வேல்சிலும் பதிவுஎண் 1093924 இன் கீழ்ப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

தமிழ் பாடசாலை

புலம்பெயர் தேசத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சவால்களைச் சந்திப்பதற்கு உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அறக்கட்டளையானது பல்வேறு சேவைகளைச் செய்து வருகின்றது. வளர்ந்து வரும் இளஞ்சமுதாயத்தின் மத்தியில், எமது தாய்மொழி தமிழைக் கற்பிப்பதையும், எமது பாரம்பரிய கலைகளை வளர்ப்பதையும், தகுதியும், அனுபவமும் வாய்ந்த ஆசிரியர்களால் வார இறுதி நாட்களில் நடைமுறைப்படுத்தி வருகின்றது. அந்தவகையில் பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், வீணை, வயலின், மிருதங்கம், சுரத்தட்டு போன்ற வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன. தற்காப்புக் கலையான கராத்தே வகுப்புகளும், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகா வகுப்புகளும் இலவசமாக நடாத்தப்பட்டு வருகின்றன. Key Stage, 11 plus வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டு விழாவில்,அனைத்து மாணவர்களும் கலைநிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலமாக தமது திறமைகளை வெளிக்கொணர்வதோடு, தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்கின்றார்கள்.அதேநேரம் வெளிநிகழ்வுகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புக்களையும் பெறுகின்றார்கள். கொவன்றிவாழ் தமிழ்மாணவர்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் வருடாந்த விளையாட்டு விழாவும் இல்லங்களின் அடிப்படையில் நடாத்தப்பட்டு வருகின்றது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் பழைய மாணவர்களுக்கிடையிலும் போட்டிகள் நடத்தப்படுவதால், போட்டிமட்டுமல்ல ஒற்றுமையும் கட்டியெழுப்பப்படுகின்றது. சமயகலாசார விழாக்களை நடாத்துவதன் மூலம், மாணவர்கள் மத்தியில் தமிழரின்பண்பாட்டு விழுமியங்கள் பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகின்றன.

இதர சேவைகள்

மாதம் ஒரு சனிக்கிழமை கொவன்றி நூல்நிலையம், பாடசாலைக்கு வருகை தந்து மாணவர் மத்தியில் வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிப்பதற்கும் வழிவகை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இளம் கலைமானி, மற்றும் முதுகலைமானி போன்ற பட்டப் படிப்புகளைத் தமிழில் மேற்கொண்டு, தாய்நாட்டில் தடைப்பட்ட கனவுகளை நனவாக்க இந்தியாவின் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகவும் செயற்பட்டு வருகின்றது. மேலும் இலவச சட்ட ஆலோசனைகள் மற்றும் பிரித்தானியபிரஜா உரிமைக்கான விண்ணப்ப படிவங்கள், கடவுச்சீட்டுக்கான விண்ணப்ப படிவங்கள், பாடசாலை விண்ணப்பப் படிவங்கள், வங்கிக்கடன்மற்றும் ஏனைய விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கும் அவற்றை உறுதிப்படுத்திகையொப்பம் இடுவதற்குமான சேவைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 22 ஆண்டுகளுக்கு மேலாக, எதிரேவந்ததடைக்கற்கள் அனைத்தையும்படிக்கற்களாக மாற்றி, ஆல்போல் தழைத்து அறுகுபோல் வோரோடி இருப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் அத்தனை பேரதும் அர்ப்பணிப்பான, தன்னலம் கருதாத, சேவைமனப்பான்மை மிக்கசேவைதான் என்றால் அது மிகையாகாது.

இணையத்தில் தமிழ் மொழிக் கல்வி

தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் சுவாமிநாதன் அவர்கள். அண்மையில் கொவென்றியில், தமிழ் இணையவலைக் கல்வி முறை பற்றி விரிவுரை ஆற்றினார். தமிழில் பகுதி நேர டிப்ப்லோமா, பிஏ கற்றுத் தேற விரும்புவோர் நிர்வாக உத்தியோகத்திரிடம் உங்கள் விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்.

These photos are as part of the Inauguration function...

mag (31K)

தமிழ் மொழியில் தேர்வு

பிரித்தானிய அரசின் கொள்கையின் படி 2014 ல் இருந்து அன்னிய மொழிகள் மதிப்பீட்டு திட்டத்தில் இருந்த 25 மொழிகளில், தேர்வு தவிர்க்கப்பட்ட மொழியாக தமிழ் மொழியும் பாதிக்கப்பட்டுள்ளது தமிழ் மொழிக்கு OCR (Oxford, Cambridge, RSA) தேர்வு இல்லாத நிலையில், அதற்கு இணையான தேர்வு வாரியமாக பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபை (BTEB)அமைக்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர் வாழ் தமிழ் சிறார்களின் தமிழ்க் கல்வி ஆர்வத்தை தொடர்ந்து வளர்பதற்காக, அவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட தேர்வு வாரியம்.

கொவன்ட்ரி தமிழர் நலன்புரிச் சங்கத்தின் தமிழ் பாடசாலையானது பிரித்தானிய தமிழ் மொழிப் பரீட்சைச் சபை (BTEB) அமைப்பின் கீழ் தமிழ் மொழிக் கல்வியும் தேர்வும் சிறப்பான முறையில் நடத்திக்கொண்டுவருகின்றது.

பிரித்தானியதமிழ்ப் பரீட்சைச் சபையால் வருடந்தோறும் நடைபெற்றுவருகின்ற தமிழ்மொழிப் பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்களுக்கு தங்க, வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களும், சான்றிதழ்களும் இலண்டனுக்கு வெளியிலுள்ள பிரித்தானிய தமிழ்ப் பரீட்சைச் சபையின் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்துப் பாடசாலைகளுக்கும் ஒரே சமயத்தில் வழங்கிக் கௌரவிக்கப்படுகின்றன. கொவன்றி தமிழர் நலன்புரிச் சங்கத்தினால் வருடம்தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டிகளில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்கின்றார்கள். 🙏> > > MORE

தொடர்பு:

Mr. Paheerathan Srinathan (திரு. பகிரதன் ஸ்ரீநாதன்)

Mobile: +447951781990

Email: info@bteb.org.uk

Web: www.bteb.org.uk


தமிழ் இணைய மாநாடு, உலகத்தமிழர் தகவல் தொழில் நுட்ப மன்றம் INFITT ராஜா அண்ணா மலைச் செட்டியார், அண்மலைப் பல்கலைக்கழகத்தில், 29-31 வரை நடத்திய தமிழ் இணைய மாநாட்டில், திரு சிவா பிள்ளை பங்கு பற்றி உரை ஆற்றியனார். Photos

ஓர் இதயத்திலேSt Antony's College Alumni Association of Europe (SACKAAEU) - Registered charity in England & Wales in the UK, proudly sponsors the film "Orr Ithayaththilae" for viewing it on line. Please watch the film as it is produced, directed and acted by Antonians and by doing so you are helping the underprivileged children who are studying at St Antony's College, Kayts, Sri Lanka. The film "Orr Ithayaththilae" is available for viewing via the - watch movie link

Inauguration of the Bharathiyar University Europe Study Centre

The inaugural meeting to host the distance learning of Applied Tamil was held at Barr's Hill School and Community College, Coventry CV1 4BU on the 12th September 2011. Vice Chancellor of Bharathiar University Dr C Swaminathan (Chief Guest of the evening) addressed the gathering of the Tamil community which was jointly organized by the Coventry Tamil Academy of Language and Arts and the Western Tamil Schools Federation. Mr Kandiah Ariyaratnam, Chairman of the Coventry Tamil Welfare Association presided the meeting and welcomed the delegates from Bharathiar University.

C o v e n t r y   T a m i l   W e l f a r e   A s s o c i a t i o n
EMail: coventrytamils2002@gmail.com

Registered as a Charity in England and Wales
Registered Charity Number: 1093924

Reproduction from CTWA website is allowed when used without any alterations to the contents and the source, CTWA, is mentioned.